Pause
  • 1

  • 2

இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்றுவந்த ஆயுத மோதல் 2009மே 19ஆம் திகதி முடிவுக்கு வந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரன் கொள்ளப்பட்டார். ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்கள் கொல்லட்டனர். கூடவே ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களும் கொல்லப்பட்டனர்.

இரத்தம் உறைந்து போயிருக்கும் முல்லைத்தீவின் கடற்கரையோரக் கிராமங்களில் இப்போதும் அதாவது யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டபோதும் இரத்த வாடை இன்னும் வீசிக் கொண்டுதான் இருக்கின்றது.

ஆங்கே வீசிக் கொண்டிருக்கும் காற்றில் தமிழர்களின் அபலக்குரல் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. யுத்தத்தின் பெயரால் அங்கே நடந்த கொடூரங்களும், கொலைகளும் ஈடுசெய்யமுடியாதவை, எடுத்துச் சொல்லமுடியாதவை.

புலிகள் நடத்தியது கொடூரம் என்றால் இலங்கை இராணுவம் நடத்தியது கோரத்தாண்டவம். இந்த இருபத்தியொராம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் மனிதக் கொலைகள் அவை.

ஆண்கள், பெண்கள், பருவவயதினர் முதல் பச்சிளம் குழந்தைகள் பாரபட்சமற்ற கொலைகள். நிர்வாணப்படுத்தியும், பாலியல் துன்புறுத்தல் செய்தும், கொத்துக் கொத்தாய் கொண்டு குவிக்கப்பட்ட குருதி வரலாறு அது.

இத்தனையையும் தாங்கிக் கொண்டும் தமிழ் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் இன்னும் இலங்கை மண்ணில் வாழ வேண்டிய கட்டாயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எல்லாம் இழந்து தோற்றுப்போன இனமாக தமிழ் மக்கள் இன்று அநாதைகளாக இருப்பதற்கு தமிழ் மக்களின் மூத்த அரசியல் தலைவர்கள் முதல் காரணம். பின்னர் ஆயுதப்போராட்டத்தில் இறங்கிய சகோதர இயக்கங்களை கொலை செய்தும் தடை செய்தும் ஏகப்பிரதிநிதித்துவ தலைமை வெறி கொண்டு உரிமைப்போராட்டத்தை தவறான வழி நடத்தி உலகமே அருவருப்போடு பார்த்த பயங்கரவாதமாக்கிய புலிகள் இரண்டாவது காரணம். புலிகள் அழிவு யுத்தம் நடத்துகின்றார்கள். அது சொந்த மக்களையும் கொன்று, ஏனைய அப்பாவி மக்களையும் கொன்று தனக்கான படுகுழியை தாமே தோண்டிக் கொள்ளப்போகின்றது என்று தெரிந்து அதை தடுக்காமல் அதற்து துதி பாடியும், போலிப் புகழாரம் சூட்டியும் உடந்தையாக நின்ற தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் காரணம்.

இப்போது தமிழ் மக்கள். தமது காணிகளையும், வளங்களையும் இழந்து இன்னும் இரண்டாந்தரப்பிரஜைகள்போல் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். யுத்த வெற்றிக்குப் பின் இலங்கைப்படையினர் கட்டுபாடற்று நடந்து கொள்கின்றனர். இந்தியா வழங்கிய உழவு இயந்திரங்களில் 90 வீதமானவை படையினரின் பாவனையிலேயே உள்ளது. இந்தியா வழங்கிய பார ஊர்திகளில் 50 வீதமானது படையினரின் பாவனையிலேயே உள்ளது. தற்காலிகமாக படையினர் அமைத்த காவலரன்களெல்லாம் இப்போது போதுமான காணி அபகரிப்புச் செய்யப்பட்டு பாரிய இராணுவ முகாம்களாக புனரமைக்கப்படுகின்றது. யுத்தகாலத்தில் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து இராணுவம் பாதுகாப்பு வலையங்களாக வைத்திருந்த தமிழ் மக்களின் காணிகளை திருப்பிக் கொடுக்காமல் தற்போது அபகரிப்புச் செய்துவருகின்றது.

கிளிநொச்சியில் யுத்தத்துக்குப்பின்னர். சொந்த காணியோ, வீடோ இல்லாமல் சுமார் 3000 குடும்பங்கள் தவிக்கின்றனர். அவர்களுக்கு இந்தியா கட்டித் தருவதாகக் கூறியிருக்கும் 50000 வீட்டுத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது வீடு கிடைக்கும் என்று இலங்கை அரசு பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டது.

அதேவேளை சீனா வழங்கிய  25000 உடனடி வீடுகள் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியின் காட்டுப்பகுதிகள் படையினரால் துப்பரவு செய்யப்பட்டு படையினருக்கான குடியிருப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த வீடுகளை 9 வீதியால் பயணம் செய்யும் போது பார்க்கமுடியாது.

வீதியிலிருந்து பார்க்கும் போது காடுகளே தெரியும் ஆனால் ஆகாய மார்க்கமாக விமானப்பயணம் செய்யும்போது படையினரின் திட்டமிட்ட குடியேற்றங்களைக் காணலாம். இது உள்நோக்கம் கொண்ட திட்டமாகும்.

தற்போது இராணுவம் அரச காணிகளையும், தமிழ் மக்களின் காணிகளையும் அபகரித்துவருகின்றது. குறிப்பாக மக்களிடமிருந்து புலிகள் அபகரித்து வைத்திருந்த காணிகளை படையினர் அதிகாரத்தோரணையோடு பறித்துவருகின்றது. மக்கள் தமது உரித்துக்களைக் காட்டி கேட்கும்போது, புலிகளுக்கு கொடுத்தீர்கள், புலிகள் பறிக்கும்போது சும்மா இருந்தீர்கள் இப்போது ஏன் உரிமை கொண்டாடுகினன்றீர்கள். அதைப்போல்தான் இதுவும் என்று படையினர் அச்சுறுத்துகின்றனர்.

புலிகள் நடத்தியது சுத்தமான பயங்கரவாதம் என்பதில் எவருக்கும் இன்னொரு கருத்து இருக்கமுடியாது. புலிகளைப்போலவே இப்போது படையினரும் நடந்து கொள்கின்றனர் என்றால், இலங்கைப்படையினரும் பயங்கரவாதம் புரிகின்றனர்.

படையினரின் பயங்கரவாத்துக்கு துணைபோகவும், இராணுவத்தின் இரும்புச் செருப்புக்கீழேயே தமிழ் மக்கள் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தை அடைவதற்கு தோதாகவே வடக்குக்கும், கிழக்குக்கும் ஆளுனர்களாக படை உயர் நிலை அதிகாரிகளை இலங்கை அரசு நியமித்துள்ளது. கிழக்கின் ஆளுனர் கடற்படை அட்மிரல். வடக்கின் ஆளுனர் இராணுவ மேஜர் ஜென்ரல். வடக்கில் ஆளுனர் படையினரின் அத்தனை அடாவடித்தனங்களையும் மூடி மறைப்பதிலும், படையினரின் கட்டமைப்புகளை வலுவாக புனரமைப்பதிலும் தீவிரமாக செயலாற்றிவருகின்றார்.

இன்னும் ஒரு படி மேலதிகமாகப்போய் தற்போது இராணுவத்துக்கு காணிகளை அபகரித்துக் கொடுப்பதிலும் ஈடுபட்டுள்ளார். படையினர் கையைக் காட்டும் காணிகளை உடனடியாகவே ஒதுக்கி வழங்கிவிட வேண்டும் என்று வடமாகாணத்தின் அத்தனை அதிகாரிகளையும் மிரட்டல் பாணியில் அனுகுவதில் வடமாகாண ஆளுனர் ஜீ.. சந்திரசிறியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை.

தமிழ் மக்களிடம் பயங்கரவாதம் புரியும் படையினரை போற்றிப்புகழும் இலங்கை அரசும் அரச பயங்கரவாதம் புரின்றது. ஆகையாலையே இப்போது இலங்கையில் சிங்கள இனவாதம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. அது தமிழ் மக்களை மட்டுமல்hது. இன்னொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.

இதன் வளர்ச்சிப்போக்குத்தான் தமிழ மக்களின் கோயில்களை உடைப்பதும், அந்த இடங்களில் முடியுமானவரை பௌத்த கோயில்களை அமைப்பதும், முஸ்லிம் பள்ளிவாசல்களை உடைக்க பிக்குகளே கம்பிகளோடு வீதியில் இறங்கி தலைமை தாங்குவதுமாகும்.

யுத்த வெற்றி மமதையில் சிங்கள அரசும் அதன் படைகளும் கட்டுப்பாடற்று நடந்து கொள்ளும்போது, இவர்களின் அடிவேர்களாக இருக்கும் சிங்கள இனவாதிகளுக்குச் சொல்லியா கொடுக்கவேண்டும்.

சிங்களப்படைகளின் கொலை வெறி எத்தகைய அசிங்கமானது, தமிழ் இனம் திட்டமிட்டு எவ்வாறு அழிக்கப்பட்டது என்பது வெளியிலேயே வராது என்று இருந்தவர்களுக்கு தற்போது வெளிவரும் கொலை ஆதாரங்கள் நிச்சயம் நடுக்கத்தைக் கொடுத்திருக்கும்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகவும், கௌரவமான வாழ்வுக்காகவும் போராட வேண்டியவர்கள் புலம் பெயர்ந்துவாழும் தமிழ் உறவுகள்தான்.

அந்தப்போராட்டம் உலக ஊடகங்களையும், இராஜதந்திர முற்போக்குச் சிந்தனையாளர்களையும் ஈர்க்கின்றவகையில் திட்டமிடப்படவேண்டும். தமிழ் மக்களின் நியாயம் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவுபடுத்தப்படுவதற்கான போராட்டம் அவசியம்.

ஆயுதங்களைவிடவும், இனி தமிழன் அறிவை ஆயுதமாகப் பயன்படுத்தவேண்டும். இதற்கு முதலில் புலம் பெயர்ந்து வாழும் ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒற்றுமைப்படுத்தப்பட வேண்டும். அது நடந்தால் சிங்களப்படைகளை விடவும் பத்துமடங்கு பலமானதாக அமையும்.

மண்ணிலிருந்து

சகோதரன்.

 

 

கடந்த கால கொடிய யுத்தத்தின் போது உயிரிழந்து போன எமது மக்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்பது இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது மக்களுக்கான அரசியலுரிமைகளை வென்றெடுப்பதேயாகும் என்றும் நடந்து முடிந்த அழிவுகளில் இருந்து எமது மக்கள் நிமிர்ந்தெழ இதுவே அவசியத்தேவை என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் தெரிவிக்கையில் தமிழ் பேசும் மக்கள் அழிவுகளையும், அவலங்களையும் சந்தித்திருப்பது முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல.
 
அதற்கு முன்னராகவே நீண்ட காலமாக எமது மக்கள் அழிவுகளையும் அவலங்களையும் இடப்பெயர்வுகளையும் சந்தித்து வந்திருக்கிறார்கள்.
 
ஆரம்பகால ஆட்சியாளர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இனக்கலவரங்களும் தனிமனித உயிர்வாழ்வுக்கு எதிரான அச்சுறுத்தல்களும், தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலுரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு சூழலும் ஒரு உரிமைப்போராட்டத்திற்கான தேவையை அன்று எமக்கு வலியுறுத்தியிருந்தது.
 
அந்த உரிமைப்போராட்டத்தில் நாமும் அன்று முன்னணிப்பாத்திரமேற்று பங்கெடுத்திருந்தவர்கள்.
 
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருப்பவர்களில் பலரும் அன்று உணர்ச்சி பொங்க பேசி எமது இளைஞர், யுவதிகளை வீதிக்கு இழுத்தார்கள்.
 
அவர்களது நடைமுறைக்கு சாத்தியமற்ற வெறும் சுயலாப உணர்ச்சி பேச்சுக்களை நம்பி வீதிக்கு வந்த எமது மக்கள் நடுத்தெருவில் நிற்க தனிநாடு கேட்ட அவர்கள் தமது குடும்பங்களோடு தப்பியோடிச்சென்று தமிழ் நாட்டில் தனிவீடுகள் பெற்று சொகுசாக வாழ்ந்தார்கள்.
 
அப்பாவி மக்களை இரத்தம் சிந்த வருமாறு போலி முழக்கமிட்டு அழைத்தவர்கள் உரிமைப்போராட்டத்தில் வியர்வை கூட சிந்தாமல் கட்டிய வேட்டி கூட பிசங்காமல் ஓடித்தப்பி விட்டனர்.
 
ஆனாலும் நாம் எமது மக்களின் நீடித்த பாதுகாப்புக்காகவும், நிரந்தர அரசியலுரிமைக்காக்கவும் நீதியானதொரு உரிமைப்போராட்டத்தை எமது மண்ணில் நின்று நடத்தியிருந்தோம்.
 
ஆனாலும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போல் ஒரே இலட்சியத்திற்காக 
உரிமைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்மத்தியில் தோன்றிய தனித்தலைமை வெறி என்பது எமது மண்ணை சகோதரப்படுகொலை களமாக மாற்றியிருந்ததால்  எமது  நீதியான உரிமைப்போராட்டம் திசை மாறி அழிவு யுத்தமாக மாறிச்சென்றது. 
 
அழிவுகளும், அவலங்களும் மட்டுமே எமது மக்களுக்கு மிஞ்சியிருந்தன. 
உட்பகை வேரறுக்கும் என்பது போல் எமது ஒற்றுமையீனம் என்பது 
எமது மக்களை கருவறுக்கத் தொடங்கியது.
 
அந்த சூழலிலேயே இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. 
எமது மக்களை அழிவுகளில் இருந்து மீட்கவும் எமது அரசியலுரிமைகளை
நோக்கி நாம் செல்வதற்கும் இலங்கை இந்திய ஒப்பந்தம் அரியதொரு
வாய்ப்பாகவே இருந்தது.
 
ஆனாலும், அதை அன்று ஒரு பகுதியினர் ஏற்கவும் இல்லை. ஏற்றுக்கொண்ட இன்னொரு பகுதியினர் சரிவரப் பயன்படுத்தவும் இல்லை.
 
அவ்வாறு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டும் சரிவரப்பயன்படுத்தியும் இருந்திருந்தால் அதற்கு பின்னரான எமது மக்களின் அழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.
 
அன்று முதல் இறுதியில் நடந்த முள்ளிவாய்க்கால் வரையிலான அழிவுகளும், இங்கு நடந்திருக்காது.
 
அதன் தொடர்ச்சியாக முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாசா புலிகள் பேச்சு வார்த்தை, சந்திரிகா குமாரணதுங்க புலிகள் பேச்சு வார்த்தை மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புலிகள் பேச்சு வார்த்தை இறுதியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புலிகள் பேச்சு வார்த்தை எனத் தொடர்ச்சியாக பல்வேறு சந்தர்ப்பங்களும் எமக்கு கனிந்து வந்திருந்தன.
 
ஆனாலும் யுத்தத்தின் மூலமே எதையும் பெறுவோம் என்ற தீர்க்கதரிசனமற்ற எண்ணங்களும் கண்ணை மூடிக்கொண்டு அதற்கு ஆதரவளித்த சுயலாப அரசியல் தலைமைகளின் பொறுப்பற்ற செயலும் எமது மக்களை முள்ளிவாய்க்கால் வரை தள்ளிச் சென்று அழிவுகளை மட்டுமே இங்கு பெற்றுத் தந்திருக்கிறது.
 
இலங்கை இந்திய ஒப்பந்த நடை முறைகளில் ஈ.பி.டி.பி யினராகிய நாம் பங்கெடுக்கும் உரிமை என்பது சக தமிழ் தலைமைகளால் மறுக்கப்பட்டிருந்தாலும் அதை நாம் கொள்கை ரீதியாக மட்டும் ஏற்றுக்கொண்டவர்கள்.
 
நாம் உட்பட, சகல விடுதலை அமைப்புகளினதும் இரத்தம் சிந்திய அர்ப்பணங்களால் உருவாக்கப்பட்டதே இலங்கை இந்திய ஒப்பந்தமாகும். எமது உரிமைப்போராட்டத்திற்கு இதுவரை கிடைத்த வெற்றி என்பது அது ஒன்று மட்டுமே.
 
ஆகவேதான்  ஆரம்பத்தில் இருந்தே நாம் அழிவு யுத்தம் வேண்டாம் என்றும், அமைதிப்பேச்சின் மூலமே எமது மக்களின் அரியலுரிமைகளை வென்றெடுக்க முடியும் என்றும் நாம் வலியுறுத்தி அதற்காக நடைமுறையில் உழைத்தும் வந்திருக்கின்றோம்.
 
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய அரசுகளின் குணாம்சம் வேறு. அதற்கு பிந்திய அரசுகளின் குணாம்சம் வேறு.
 
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பிந்திய இலங்கை அரசுகள் அரசியல் தீர்வுக்கு உடன் பட்டு வந்திருந்த போதும் மாறி வரும் உலகத்தின் போக்கை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் உடன்பட்டு வந்திருக்கவில்லை.
 
இவ்வாறு நாம் கூறுவது சுயலாப தமிழ்த் தலைமைகளின் பார்வையில் பொய்யானதாக இருந்திருந்தால் அவர்கள் அரசியல் தீர்வுக்கு தயாராக இருப்பது என்பது உண்மையானதாக இருந்திருந்தால் அதற்கான தமது மனவிருப்பங்களை நடை முறையில் வெளிப்படுத்தி நாம் போராடுவதும் வாதாடுவதம் நீதியானதொரு அரசியலுரிமைக்காகவே என்பதை சர்வதேச சமூகத்தின் முன்பாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
 
அவ்வாறு இவர்கள் செய்ய விரும்பாத காரணத்தினாலுமே எமது உரிமை போராட்டம் என்பது பயங்கரவாத செயற்பாடுகளாக உலக அரங்கில் அடையாளப்படுத்தப்பட்டது.
 
இதுவே எமது மக்கள் அழியும் போதும் அவலப்படும் போதும் சர்வதேச சமூகம் அதை தட்டி கேட்க விருப்பமின்றி கை கட்டி நின்றது என்று சுயலாப அரசியல் தலைமைகள் நீலிக்கண்ணீர் வடிப்பதற்கு காரணமான விடயமாகும்.
 
சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் விட்ட வரலாற்று தவறுகளால் எமது மக்கள் அழிந்தும் அவலப்பட்டும் இடம்பெயர்ந்தும் நிலமிழந்தும் சொத்திழந்தும் அலைந்து திரிய வேண்டிய துயரங்கள் இங்கு நடந்தன.
 
ஆகவே, கடந்து போன வரலாற்றுத் தவறுகளை ஏற்றுக்கொண்டு இனியொரு அழிவுக்குள் எமது மக்களை தள்ளி விடாமல் புது விதி படைப்பதற்கு தமிழ்த் தலைமைகள் யாவும் நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் உழைப்பதற்கு முன்வரவேண்டும்.
 
வெறும் சுயலாபங்களுக்கான அர்த்தமற்ற உணர்ச்சி பேச்சுக்கள் எதையும் எமக்கு பெற்றுத்தராது. மாறாக அழிவுகளை மட்டுமே பெற்றுத்தரும் என்பது அனுபவங்கள் எமக்கு கற்றுத்தந்த பாடங்களாகும்.

ஆகவே, சாணக்கிய தந்திரங்களும் மதிநுட்ப சிந்தனைகளும் எமது மக்களை வழி நடத்திச் செல்ல வேண்டும்.
 
எதுவாக இருப்பினும் இதுவரைகால அழிவு யுத்தத்தின் போது உயிரிழந்து போன அனைத்து மக்களுக்கும் நாம் மரியாதை செலுத்துகின்றோம்.

இவர்களது இழப்புகளால் துயருற்றிருக்கும் அனைத்து உறவுகளுடனும் எமது துயரங்களை பகிர்ந்து கொள்கின்றோம். 

அந்த மரியாதைகளுக்காகவே சமாதனம் வளமான தேசம் அரசியலுரிமை சுதந்திரம் குறித்த உயிரிழந்தவர்களது கனவுகளை நிறைவேற்ற வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.
 
இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடந்து முடிந்த அழிவுகளையும் அவலங்களையும் வைத்து அர்த்தமற்ற வகையில் பகைமையுணர்வை வளர்க்காமல்:
 
அப்பாவி மக்களின் இழப்புகளை வைத்து அரசியல் சுயலாபம் தோடாமல் எமது மக்களை நிம்மதியாகவும் சுதந்திர பிரஜைகளாகவும் எமது மண்ணில் வாழவைப்பதை பிரதான நோக்காகக் கொண்டு அனைத்து தமிழ்த் தலைமைகளும் ஆக்க பூர்வமாக உழைக்க முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

Top News

Lastest headlines:
14/05 அமெரிக்காவை தவிர்த்து சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் புடின் - 'ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற விளாடிமிர் புடின், அமைச்சரவை உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனால் அமெரிக்காவில் நடக்கும் ஜி8 நாடுகள் மாநாட்டில் பங்கேற்கவில்லை.
14/05 ஸ்ட்ராஸ்கான் என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை: பாலியல் தொழிலாளி - 'சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவரான டொமினிக் ஸ்ட்ராஸ்கான் வாஷிங்டன் விடுதியில், பெண்களிடம் தவறான முறையில் நடக்கவில்லை என பாலியல் தொழிலாளி ஒருவர் கூறியுள்ளார்.
12/05 இது துபாயில் நடந்த ஒரு கொடுமையான உண்மைச் சம்பவம். - ' இது துபாயில் நடந்த ஒரு கொடுமையான உண்மைச் சம்பவம். குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரை போல் நடித்த நபர் ஒருவர் காருக்குள் வைத்து இளம் யுவதியை கற்பழித்தமை தொடர்பான வழக்கு டுபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
12/05 ஓமனில் இந்தியர்கள் தற்கொலை செய்வதை தடுக்க பிரசாரம் - 'ஓமன் நாட்டில் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் நாளை மறுதினம் தொடங்குகிறது. ஓமன் நாட்டில் இந்தியர்கள் பலர் வசிக்கின்றனர். பணம் மற்றும் குடும்ப பிரச்னைகளால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 25 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
12/05 இஸ்ரேலில் நிலநடுக்கம் ! - ' இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல் அவிவ், ஜெருசலேம், ரமலா, ஜெனின் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்த கட்டிடங்கள் அதிர்ந்தன.
12/05 கழிவறைக்குள் யுவதியுடன் தகாத உறவு வைத்திருந்த மலேசிய அரசியல்வாதி! (படங்கள் இணைப்பு) - ' இன்றைய உலகில் அரசியல் வாதிகள், ஆன்மீகவாதிகள் போன்றோரின் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு இருக்கின்றது. மலேசியாவில் கடந்த வாரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய பாரதூரமான விடயங்களில் ஒன்று பி. கே. ஆர் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அஸ்மின் அலி பற்றியது.
12/05 மாப்பிள்ளைக்கு பைக் கேட்டு மிரட்டல்: திருமணம் நிச்சயமான புதுப்பெண் தற்கொலை - ' வியாசர்பாடி பெரியார் நகர் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் தட்சிணா மூர்த்தி, மீன் வியாபாரி. இவரது மனைவி தாட்சாயிணி. இவர்களது மகள் விமலா (20)வுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. மணமகன் கோபால கிருஷ்ணன், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர். கோபால கிருஷ்ணனுக்கும் விமலாவுக்கும் வருகிற 23-ந்தேதி ...
11/05 இந்தோனேசியாவில் மாயமான ரஷ்ய விமானம் கண்டுபிடிப்பு நொறுங்கி கிடக்கிறது; 50 பயணிகளும் பலி - 'இந்தோனேசியாவில் காணாமல் போன ரஷ்ய விமானம் நொறுங்கி கிடக்கும் பகுதியை கண்டுபிடித்துள்ளனர். அதில் பயணம் செய்த பயணிகள் 50 பேரும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
11/05 சோதனை ஓட்டத்தின்போது ரஷிய விமானம் மாயம்! - 'இந்தோனேஷியா அரசு ரஷியாவின் ‘சுகோய் சூப்பர் ஜெட் என்ற புதிய வகை விமானத்தை வாங்க முடிவு செய்துள்ளது. அதனால் இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் உள்ளூர் நேரப்படி நேற்று பகல் 2.35மணியளவில் இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவில் நடாத்தப்பட்டது.
11/05 தாதிமாரால் கொடூரமாக நடாத்தப்படும் முதியோர்கள்! இத்தாலியில் வெளியான வீடியோவால் பரபரப்பு! - 'இன்றைய உலகில் முதியோர்கள் எனப்படுபவர்கள் பிள்ளைகள் மட்டுமல்ல எல்லோராலும் சுமையாகவே நோக்கப்படுகின்றார்கள்.

Columnists

Features

Hide Main content block

Health

சுக‌ப்பிரசவத்திற்கான குறிப்புகள்...
7 மாதத்திற்கு பிறகு நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்கவும்.  காரமான உணவு உண்பது சுகப்பிரசவத்தை எளிதாக்குகிறது. ஆனால் இது போன்ற உணவை ... More info...

Technology

புற்றுநோய்க்கு புதிய ஊசி மருந்து கண்டுபிடிப்பு
புற்றுநோயை குணப்படுத்துவதற்கு தற்போது புதிய ஊசி மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது More info...

Sport News

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான 10 இலட்சம் ...
லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான 10 இலட்சம் டிக்கெட்டுகளின் விற்பனை நாளை தொடங்குகிறது More info...

Entertainment

நடிகை நயந்தாரா சிக்கினார்:அதிர்ச்சியில் நடிகைகள்!
சில நாட்களுக்கு முன்பு நடிகை நயந்தார வெளிநாடு சென்று விட்டு திரும்போது சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக சோதனைக்கு ... More info...
70 வயது கன்னி கழியாத ...

நிச்சயமாக இப்படியான ...

அண்மையில் வானத்தை ...
அம்மன் ஆலயத்தில் பாம்பு ...

அம்பாறை மாவட்டத்தில் ...

ஆஸ்திரியாவில் தலைகீழாக ...

 

உலகின் மிகச் சிறிய ...

அவுஸ்திரேலியாவின் ...

கொடுமையான வெயில் ...

 

சிங்கப்பூரில் அழகிகளுடன் ...

 

பூனை இறந்த துக்கத்தில் ...

இங்கிலாந்தில் ...